Sunday 23 February 2020

பாலகுமாரன் நினைவுகள் -1

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை எனது கல்லூரி நாட்களிலேயே நான் வாசிக்க ஆரம்பித்து விட்டேன் இருந்தாலும் அவரை நேரில் சேர்ந்து சந்திக்கும் வாய்ப்பையும் இழந்துவிட்டேன்

நான் சொல்லி எனது நண்பர்கள் பலர் அவரை சந்தித்து இருக்கின்றனர்.

எதை எப்போது செய்ய வேண்டும்

 யாரிடம் எதைப் பேச வேண்டும்

எப்போது பேசாமல் இருக்க வேண்டும்.

உனது இருத்தலை எப்போது காட்ட வேண்டும்

 எதை ஏற்க வேண்டும் எதை மறுக்க வேண்டும்

அனைத்தையும் கற்றுத் தந்தவர் என் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள்..

27 ஆண்டுகளுக்குப் பின் என் கல்லூரி தோழியை தொலைபேசி வழி தொடர்பு கொண்டேன்...

பாலகுமாரனை பற்றி நீண்ட உரையாடல் நிகழ்ந்தது.

பாலகுமாரன் படைப்புகளை மறுவாசிப்பு செய்ய ஆயத்தமாகி கொண்டு இருக்கிறேன்...

மரணத்துக்குப் பின்னும் மனிதர்கள் வாழ்கிறார்கள் அந்தவகையில் என் ஆதர்ச எழுத்தாளர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் .

நன்றி என் தோழிக்கு...

No comments:

Post a Comment