Tuesday 15 September 2020

இந்திய ஓவியர்கள்-2

L.N.TASKER என்று அழைக்கப்படும்
lalaxman narayan taskar 1870ல் மும்பையில் பிறந்தார்.

சர் ஜே.ஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் கல்வி கற்றார், அங்கு அவர் 1898ஆம் ஆண்டு முதல் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார்.
மரியாதைக்குரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் ஆசிரியராக இருந்தார்,

அதே பள்ளியில் கலை ஆசிரியராக, அவர் பல பரிசுகளைப் பெற்றார், மேலும் அவரது ஓவியங்கள் இந்தியாவில் பல அருங்காட்சியகங்கள் மற்றும் கலை சங்கங்களில் உள்ளன. டாஸ்கரின் ஓவியங்களில் உள்ளூர் அழகியல் பற்றிய வலுவான உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது

1898 ஆம் ஆண்டில், பாம்பே ஜே. ஜே. பள்ளி கலை, பாம்பே ஒரு கலை ஆசிரியராக இணைந்தார். புறநிலை துல்லியம், முறையான ஒழுங்கு மற்றும் காட்சி விவரிப்பில் ஆர்வம் ஆகியவற்றின் பாணியில் 'ஓவியங்கள்' வரைந்தார்.

சமகால சமூக உண்மையின் பிரதிபலிப்பதற்கான ஒரு கருவியாக அவர் இருந்தார்.

திருவிழாக்கள், சமூக நிகழ்வுகள், மக்கள் கூட்டங்கள் ஆகியவற்றை தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார்.

டாஸ்கர் ஒரு தனிப்பட்ட ஓவியராக இருந்தார். தான் கற்ற ஓவிய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பெற்ற விருதுகள்

1935, 1933 : Simla Fine Arts Society, Simla

1930 : Mysore Dussehra Exhb., Mysore

1909, 1925, 1926, 1929, 1930, 1933, 1935, 1936 : Bombay Art Society, Bombay

1904, 1922, 1927 : Madras Art Society, Madras

1898 : Awarded Certificate for Elementary Architecture. Awarded Mayo Medal, Bombay

1898 : Awarded Certificate for Elementary Architecture

1895, 1894, 1889 : Awarded Art Certificate, Bombay

 இவரது ஓவியங்கள் இன்றும் காட்சி படுத்தப்படுகிறது...

2005 : Manifestations III, organised by Delhi Art Gallery, Nehru Center, Mumbai and Lalit Kala Akademi, New Delhi

2004 : Manifestations II, organised by Delhi Art Gallery, Jehangir Art Gallery, Mumbai and Delhi Art Gallery, New Delhi

1930 : Mysore Dussehra Exhb, Mysore

1935, 1933, 1930 : Annual Exhb., Simla Fine Arts Society, Simla

1939, 1938, 1936, 1935, 1933, 1929, 1930, 1926, 1925, 1909 : Annual Exhb., Bombay Art Society, Bombay

1927, 1922, 1904 : Annual Exhb., Madras Art Society, Madras

இவரது ஓவியங்கள் கீழ் காணும் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Sri Bhavani Museum, Aundh

Kerala Museum, Thiruvananthapuram

Prince of Wales Museum, Mumbai

Delhi Art Gallery, New Delhi

  

தூக்கணாங்குருவி

தூக்கனாங்குருவி கூடு தென்காசி மேலகரத்தில் ஒரு கிணற்றில் பார்த்தேன்.

தூக்கணாங்குருவி கூடு கட்டி கொண்டு இருக்கிறது.

தூ.குருவி ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடம்  இயற்கை சம நிலையில் உள்ளது என கொள்ளலாம்.

தூ.குருவி ஆண் குருவி கூடு கட்டும். ஒரு கூடு அல்ல. மூன்று கூடுகள் வரை கட்டும்.

ஒரு கூட்டிற்கு இரண்டு வாசல்கள், கூட்டில் இரண்டு அறைகள் என வித விதமாக கட்டும்.

கட்டி முடித்த பின் ஒரு வித்தியாசமான குரல் எழுப்பி பாடும் அதை கேட்டதும் பெண் குருவி கூட்டை பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்து முட்டை இட்டு வாழும்.

தூக்கணாங்குருவி வாசலை வடக்கு திசை நோக்கி வைத்து கட்டினால் அந்த வருடம் பருவமழை நன்றாக இருக்கும்.
ஓர் அனுபவ விவசாயி என்னிடம் சொன்னது.

#தூக்கணாங்குருவி
#பருவமழை
#வடக்குதிசை

பாரதி அறுபது

#பாரதி_அறுபது

சிட்டுக்குருவி
----------------------
தெய்வமே எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா?

 பாழ் மனிதர் கூட்டத்தையும்,அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும்,பொய்களையும், உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?

ஆஹா எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள், எத்தனை மலர்கள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல் வெளிகள்!

 வெயில்,மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாக வழக்கப்படி இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளை உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள்புரிய லாகாதா?

 குருவிக்கு பேசத் தெரியும் பொய் சொல்ல தெரியாது குருவியில் ஆண் பெண் உண்டு.

 தீராத கொடுமைகள் இல்லை குருவிக்கு வீடு உண்டு; தீர்வை கிடையாது, குருவிக்கு உணவு உண்டு, உழைப்புண்டு  நாயகன் இல்லை;சேவகமில்லை...

#நன்றி  
#மகாகவி
#பாரதியார்

Friday 21 August 2020

தூக்கணாங்குருவி

தூக்கனாங்குருவி கூடு தென்காசி மேலகரத்தில் ஒரு கிணற்றில் பார்த்தேன்.

தூக்கணாங்குருவி கூடு கட்டி கொண்டு இருக்கிறது.

தூ.குருவி ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடம்  இயற்கை சம நிலையில் உள்ளது என கொள்ளலாம்.

தூ.குருவி ஆண் குருவி கூடு கட்டும். ஒரு கூடு அல்ல. மூன்று கூடுகள் வரை கட்டும்.

ஒரு கூட்டிற்கு இரண்டு வாசல்கள், கூட்டில் இரண்டு அறைகள் என வித விதமாக கட்டும்.

கட்டி முடித்த பின் ஒரு வித்தியாசமான குரல் எழுப்பி பாடும் அதை கேட்டதும் பெண் குருவி கூட்டை பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்து முட்டை இட்டு வாழும்.

தூக்கணாங்குருவி வாசலை வடக்கு திசை நோக்கி வைத்து கட்டினால் அந்த வருடம் பருவமழை நன்றாக இருக்கும்.
ஓர் அனுபவ விவசாயி என்னிடம் சொன்னது.

#தூக்கணாங்குருவி
#பருவமழை
#வடக்குதிசை

Thursday 20 August 2020

வீ.கே புதூர் ஓவியங்கள்

மிக நீண்ட பதிவு.

சுரண்டை இரண்டாவது புத்தக கண்காட்சிக்காக  சுரண்டை மற்றும் வீகேபுதூரில் கள ஆய்வு நடத்தினேன்.

 என் மனதை விட்டு அகலாத ஒரு இடமாக வி கே புதூர் ஜமீன் உள்ளது வானளாவிய கட்டிடங்கள்
திட்டமிட்டு கட்டப்பெற்ற கட்டிடம் ஜமீனின் ஒவ்வொரு செங்கல்லும் அதனுடைய கம்பீரம் இன்றும் மிளிர்ந்து கொண்டு இருக்கிறது.

ஜமீனில் எங்காவது ஒரு ஓவியம் கிடைக்காதா என்று தேடி அலைந்தேன் ஆள் உயர சட்ட இடப்பட்ட  ஓவியங்கள் கண்ணுக்குத் தெரியாமல் சிதைந்து போயிருந்தன.

 யாரிடமாவது ஜமீன் வரலாறு கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் யாரும் ஜமின் வரலாறு சொல்ல தயாராக இல்லை. ஏனெனில், ஐமீன் வளாகத்தில்தான் மதுபான கடை உள்ளது இதை அந்த ஊர் மக்கள் மிகவும் வெறுப்புடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

 மன்னருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை சிறந்த தெய்வ பக்தி கொண்ட மன்னரிடம் கிருஷ்ணர் கனவில் தோன்றி எனக்கு ஒரு கோயில் எழுப்புவாயாக அதன் மூலம் உனக்கு ஒரு வாரிசு கிடைக்கும் என்று சொன்னதாக ஒரு வரலாறு உண்டு.

 அதன்படி ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் கோவில் என்று ஒரு கோவிலில் மன்னர் கட்டிவைத்தார் இந்த கோவிலின் வாயிலில் இரு சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன வலது பக்க சுவரில் கிருஷ்ணரின் தசாவதாரம் உள்ளது இடது பக்கச் சுவரில் மச்சாவதாரம் மற்றும் கிருஷ்ணனுடைய அடியார் ஒருவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

 

#வீகேபுதூர்
#ஜமீன்
#நவநீதகிருஷ்ணன்ஆலயம்
#இருதாளயமருதுபாண்டியன்
#சுவர்ஓவியங்கள்

Sunday 23 February 2020

பாலகுமாரன் நினைவுகள்-2

பாலகுமாரன் அவர்களின் ஒரு கட்டுரையை ஒரு கதையைப் படித்துவிட்டு எனது குருநாதர் ஓவிய மேதை திரு எஸ் எஸ் மணியன் அவர்கள் பாலகுமாரனை  சித்திரமாக தீட்டி அவருக்கு அனுப்பி வைத்தார்.

அனுப்பிய வேகத்திலேயே அவருக்கு புத்தகம் பரிசாக கிடைத்தது.

ஓவியத்தை அவருக்கு அனுப்பும் போதும், புத்தகம் பரிசாக கிடைத்த போதும் நான் என் குருவிடம் ஓவிய பயிற்சி எடுத்துக் கொண்ட சமயம்...

பாலகுமாரன் ஓவியம் பிரசுரம் ஆன நூலை  எனது ஆசானிடம் காண்பித்தேன்..‌

மிகவும் மகிழ்ந்தார்...

பாலகுமாரனை படியுங்கள் நீங்களும் உலக வாழ்வியல் உங்களுக்கு புரியும் என்றார்...

இதை உங்களுடன் மகிழ்வாய் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி...

பாலகுமாரன் நினைவுகள் -1

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை எனது கல்லூரி நாட்களிலேயே நான் வாசிக்க ஆரம்பித்து விட்டேன் இருந்தாலும் அவரை நேரில் சேர்ந்து சந்திக்கும் வாய்ப்பையும் இழந்துவிட்டேன்

நான் சொல்லி எனது நண்பர்கள் பலர் அவரை சந்தித்து இருக்கின்றனர்.

எதை எப்போது செய்ய வேண்டும்

 யாரிடம் எதைப் பேச வேண்டும்

எப்போது பேசாமல் இருக்க வேண்டும்.

உனது இருத்தலை எப்போது காட்ட வேண்டும்

 எதை ஏற்க வேண்டும் எதை மறுக்க வேண்டும்

அனைத்தையும் கற்றுத் தந்தவர் என் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள்..

27 ஆண்டுகளுக்குப் பின் என் கல்லூரி தோழியை தொலைபேசி வழி தொடர்பு கொண்டேன்...

பாலகுமாரனை பற்றி நீண்ட உரையாடல் நிகழ்ந்தது.

பாலகுமாரன் படைப்புகளை மறுவாசிப்பு செய்ய ஆயத்தமாகி கொண்டு இருக்கிறேன்...

மரணத்துக்குப் பின்னும் மனிதர்கள் வாழ்கிறார்கள் அந்தவகையில் என் ஆதர்ச எழுத்தாளர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் .

நன்றி என் தோழிக்கு...