ஆல்பிரெஃக்ட் டியூரெ (மே 21, 1471– ஏப்ரல் 6, 1528)[2] என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார்.
ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான் (1513), புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல் (1514) , வருத்தம் (1514). இவற்றை விரிவாக திறனாய்வாளர்கள் பலகாலமாக அலசி வந்திருக்கின்றார்கள். இவருடைய water color இயற்கைக் காட்சிப் படங்கள் ஐரோப்பாவிலேயே முன்னோடியானதும், சிறந்தவை என்றும் புகழ்பெற்றவை. இவருடைய மரக்கட்டை அச்சுப் (woodcut) படங்கள் இத்துறையில் புதுமைகள் படைத்தவை. இவை இத்துறையில் இவருடைய நுட்ப முறைகளால் எவ்வளவு வளர்ச்சிகள் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று காட்டியது. ஆல்பிரெஃக்ட் டியுரே இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களுடைய கலைநுணுக்கத்தை உணர்ந்தும், ஜெர்மனியின் அறிவுசார்ந்த அறக்கொள்கையரின் கொள்கைகளை அறிந்தும், அதனை தன்னுடைய கலைப்படைப்புகளில் வெளிப்படுத்தியமையால் இவருக்கு நிலைத்த புகழை ஈட்டுத் தந்துள்ளன. இவை மட்டுமல்லாமல் இவருடைய கணிதம் சார்ந்த உருவத் தோற்றங்களும், சரியான உடலுருவ விகிதங்கள் பற்றிய அறிவும் கொண்டு இவர் ஆக்கிய படைப்புகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன.
ரபாயல், ஜியோவானி பெல்லினி மற்றும் லியோனார்டோ டா வின்சி உள்ளிட்ட முக்கிய இத்தாலிய கலைஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment