Thursday 20 August 2020

வீ.கே புதூர் ஓவியங்கள்

மிக நீண்ட பதிவு.

சுரண்டை இரண்டாவது புத்தக கண்காட்சிக்காக  சுரண்டை மற்றும் வீகேபுதூரில் கள ஆய்வு நடத்தினேன்.

 என் மனதை விட்டு அகலாத ஒரு இடமாக வி கே புதூர் ஜமீன் உள்ளது வானளாவிய கட்டிடங்கள்
திட்டமிட்டு கட்டப்பெற்ற கட்டிடம் ஜமீனின் ஒவ்வொரு செங்கல்லும் அதனுடைய கம்பீரம் இன்றும் மிளிர்ந்து கொண்டு இருக்கிறது.

ஜமீனில் எங்காவது ஒரு ஓவியம் கிடைக்காதா என்று தேடி அலைந்தேன் ஆள் உயர சட்ட இடப்பட்ட  ஓவியங்கள் கண்ணுக்குத் தெரியாமல் சிதைந்து போயிருந்தன.

 யாரிடமாவது ஜமீன் வரலாறு கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் யாரும் ஜமின் வரலாறு சொல்ல தயாராக இல்லை. ஏனெனில், ஐமீன் வளாகத்தில்தான் மதுபான கடை உள்ளது இதை அந்த ஊர் மக்கள் மிகவும் வெறுப்புடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

 மன்னருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை சிறந்த தெய்வ பக்தி கொண்ட மன்னரிடம் கிருஷ்ணர் கனவில் தோன்றி எனக்கு ஒரு கோயில் எழுப்புவாயாக அதன் மூலம் உனக்கு ஒரு வாரிசு கிடைக்கும் என்று சொன்னதாக ஒரு வரலாறு உண்டு.

 அதன்படி ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் கோவில் என்று ஒரு கோவிலில் மன்னர் கட்டிவைத்தார் இந்த கோவிலின் வாயிலில் இரு சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன வலது பக்க சுவரில் கிருஷ்ணரின் தசாவதாரம் உள்ளது இடது பக்கச் சுவரில் மச்சாவதாரம் மற்றும் கிருஷ்ணனுடைய அடியார் ஒருவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

 

#வீகேபுதூர்
#ஜமீன்
#நவநீதகிருஷ்ணன்ஆலயம்
#இருதாளயமருதுபாண்டியன்
#சுவர்ஓவியங்கள்

No comments:

Post a Comment