Friday 21 August 2020

தூக்கணாங்குருவி

தூக்கனாங்குருவி கூடு தென்காசி மேலகரத்தில் ஒரு கிணற்றில் பார்த்தேன்.

தூக்கணாங்குருவி கூடு கட்டி கொண்டு இருக்கிறது.

தூ.குருவி ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடம்  இயற்கை சம நிலையில் உள்ளது என கொள்ளலாம்.

தூ.குருவி ஆண் குருவி கூடு கட்டும். ஒரு கூடு அல்ல. மூன்று கூடுகள் வரை கட்டும்.

ஒரு கூட்டிற்கு இரண்டு வாசல்கள், கூட்டில் இரண்டு அறைகள் என வித விதமாக கட்டும்.

கட்டி முடித்த பின் ஒரு வித்தியாசமான குரல் எழுப்பி பாடும் அதை கேட்டதும் பெண் குருவி கூட்டை பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்து முட்டை இட்டு வாழும்.

தூக்கணாங்குருவி வாசலை வடக்கு திசை நோக்கி வைத்து கட்டினால் அந்த வருடம் பருவமழை நன்றாக இருக்கும்.
ஓர் அனுபவ விவசாயி என்னிடம் சொன்னது.

#தூக்கணாங்குருவி
#பருவமழை
#வடக்குதிசை

No comments:

Post a Comment