Tuesday 15 September 2020

பாரதி அறுபது

#பாரதி_அறுபது

சிட்டுக்குருவி
----------------------
தெய்வமே எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா?

 பாழ் மனிதர் கூட்டத்தையும்,அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும்,பொய்களையும், உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?

ஆஹா எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள், எத்தனை மலர்கள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல் வெளிகள்!

 வெயில்,மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாக வழக்கப்படி இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளை உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள்புரிய லாகாதா?

 குருவிக்கு பேசத் தெரியும் பொய் சொல்ல தெரியாது குருவியில் ஆண் பெண் உண்டு.

 தீராத கொடுமைகள் இல்லை குருவிக்கு வீடு உண்டு; தீர்வை கிடையாது, குருவிக்கு உணவு உண்டு, உழைப்புண்டு  நாயகன் இல்லை;சேவகமில்லை...

#நன்றி  
#மகாகவி
#பாரதியார்

No comments:

Post a Comment