Sunday, 24 February 2019

தேடல்

இது வசந்த காலம்

கனிகளும்
 காய்களும்
முற்றிய விதைகளும்
 பூத்துக் குலுங்கிக்
 கொண்டிருக்கும் காலம்

இத்தனை செல்வங்கள் பூமியில் எதற்காக
என் வயிறோ மிகச் சிறியது
எனது எல்லையோ வரம்பற்றது பறந்துகொண்டே இருக்கிறேன்.

 வழித்துணையாய் எண்ணற்ற கணக்கற்ற பறவைகள்
அவற்றில் சில இயந்திர பறவைகள்

எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் தெரியாது

இரை கண்ட இடம் இறங்குவேன் இரையைத் தேடும் நோக்கில்
மீண்டும் பறப்பேன்...

#jayarampost

No comments:

Post a Comment