Thursday, 20 June 2019

கவிஞர் விக்ரமாதித்யன்


கவிஞர் விக்ரமாதித்யன் எனது பக்கத்துக்கு ஊர் காரர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து இருக்கிறேன்.

ஒருமுறை ராஜபோதையில் மனிதன் இருந்தார்.

எனக்கு ஒரு சிகரெட் வாங்கி கொடு   என உரிமையுடன் வாங்கி புகைத்தார்.

அன்று தான் ஒரு சிகரெட் விலை என்ன என்று தெரியும்.

ஜோதிடம், புதுமைப்பித்தன், ஆன்மீக வாழ்க்கை என மூன்று மணி நேரம் பேசினோம்.

தொடர்ந்து காசி யாத்திரை பற்றி விரிவாக சொன்னார். எனக்கும் காசி யாத்திரை போகும் எண்ணம் பற்றி சொன்னேன்.

எங்கே சென்றாலும் துணைவியாரை அழைத்து செல் என்றார்.

அவரின் காடாறு மாதம் நாடாறுமாதம் வாசித்தேன்.

மனிதன் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

கவிஞரின் தந்தை கவிஞரை ஒரு சிறந்த ஆளுமையாக பல்வேறு வழிகளில் பல்வேறு காலகட்டங்களில் முயற்சி செய்திருக்கிறார்

மாற்றம் ஒன்றே மாறாதது.

அறுபதுகளில் ஜமீன்கள் வீழ்ச்சியடைய பெரும்பாலானோர் வாழ்க்கை காணாமல் போய்விட்டது அல்லது தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விட்டார்கள்.

கவிஞருக்கு மிகவும் பிடித்தது காசி ஒருசமயம் ஆனந்தவிகடனில் காசிக்கு சென்று வந்ததை பற்றி அழகாக கட்டுரை எழுதியிருந்தார் நான் அதில் என்னை மறந்திருந்தேன் என்றே சொல்லலாம் கவிஞரின் கட்டுரையைப் படித்துவிட்டு உடனே அவரை நேரில் சந்தித்து காசியைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன் காசி ஒரு புராதனமான நகரம் அது ஒரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொள்வதே இல்லை அது பல்வேறு முகங்களை கொண்டது அதை அனுபவிக்க உடம்பில் கண்டிப்பாக தெம்பு வேண்டும் நீ சென்று வா என்று கூறினார்

வாழ்வின் விளிம்பு நிலை என்ன என்பதை இந்த நூலை வாசித்தால் அறிந்து கொள்ள முடியும்.

கவிஞர் இத்தனை கஷ்டங்களுடன் தன் வாழ்க்கையை கொண்டு சென்றாலும் ஒரு இடத்திலும் தான் கஷ்டப்பட்டதை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை .

நான் எவ்வளவு கஷ்ட படுகிறேன் தெரியுமா ? என்று யாரிடமும் துயர பட்டது கிடையாது.

வாழ்வது ஒரு போராட்டம் எனில் கவிஞனாக வாழ்வது அதைவிட பெரிய போராட்டம் .

தமிழ் இலக்கிய உலகமே கொண்டாடும் கவிஞரை நான் கேட்பது எல்லாம் இத்தோடு இந்த மதுவை விட்டுவிடுங்கள் என்ற ஒன்றை மட்டும் தான்

பயணங்கள் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை அப்படியே வாய்த்து விட்டாலும் அதை பதிவு செய்ய  முடிவதில்லை.

கவிஞருக்கு பயணங்களும் அதை பதிவு செய்யவும் மனோநிலையும் வாய்த்திருக்கிறது .

நக்கீரன் வெளியீடாக வந்த இந்த நூலை அவசியம் வாசித்துப் பாருங்கள் வாழ்வின் மறுபக்கம் உங்களுக்குத் தெரியும்

No comments:

Post a Comment