எட்டாம் வகுப்பில் அம்மா அப்பா வேறிடம் நான் வேறிடம் என படிக்கும் காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலையால் சமைக்க பழக ஆரம்பித்தேன் .
பத்தாம் வகுப்பு தொடும்போது ஓரளவு நன்றாக சமைக்க பழகிவிட்டேன் இதில் எனது தம்பிக்கும் எனக்கும் ஒரு போட்டியே நடக்கும் யாரு சுவையாக சமைப்பது என்று.
பின்னர் பாட்டி கையால் நன்றாக சுவையாக பாரம்பரிய உணவுகளை சமைக்க பழகி அவர்கள் அடியொற்றி சமைத்து ருசித்து அவர்களின் எனக்கு பரம திருப்தியாக போய்விட்டது.
ஒவ்வொரு நாளும் ராஜபோக உணவு சமைப்பது முதல் எளிய உணவு சமைப்பது வரை என ஒரு ஆலோசனை கூட்டம் எனது பாட்டி எனக்கும் நடக்கும்.
பின்னர் கல்லூரி காலங்களில் சென்று பல்வேறு ஊர்களில் இருந்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது நான் முதலில் கேட்பது உங்கள் ஊரில் என்ன உணவு பிரபலம் என்று.
மதுரையில் படித்த காலத்தில் மதுரை உணவுகளை தேடித்தேடி உண்டு ரசித்தோம்.
பின்னர் செட்டிநாடு உணவுகளை தேடி அதை சுவைத்து ரசித்தோம்.
உள்ளூரில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாரம்பரியமான உணவு இருக்குமென்று அதைத் தேடி அலைந்து அதையும் சுவைத்தேன்.
ஒருசமயம் என்ன அம்மாவிற்கும் எனக்கும் ஒரு விவாதம் நடந்தது சமையலில் சிறந்தவர்கள் ஆண்களா பெண்களா என.
இதுபற்றி மதியமரில் ஒரு பெரிய விவாதத்தை நான் கிளப்பினேன். என் தாய் எனக்கு சொன்னது ஆண்கள் தான் என்று சொன்னார்கள்.
இன்று சமையலில் பெண்கள் சக்கரவர்த்திகளாக இருந்தாலும் ஆண்களே சமையல் கலையில் சிறந்தவர்கள் என கூறினார்கள் .
கிருஷ்ண பரமாத்மாவுக்கு கூட ஒரு அந்தரங்க சமையல்காரன் என்று என்று ஒரு நூலில் படித்தேன்.
சமையல் கலையில் மிகப்பெரிய ஆளுமையாக புராணங்களின் நளன் வரை இன்று உள்ள ஏட்டு தவசுப்பிள்ளை வரை ஒரு விரிவாக ஒரு எடுத்துரைத்தார்கள்.
மேலும் ஒரு சமயத்தில் ஒரு ஆய்விற்காக சமையல் கலையில் சிறந்தவர் யார் என ஒரு அனுமானிக்கும் பொருட்டு என் ஊரில் உள்ள சமையல்காரரை சென்று சந்தித்தேன் .
அவர்கள் சொன்னது யார் ரசம் நன்றாக வைக்கிறார்களோ அவர்கள் சிறந்த சமையல்காரன் என மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்றனர் .
அந்த வகையில் எனது பக்கத்து ஊரில் ரச சக்கரவர்த்தி என பட்டம் பெற்ற இரண்டு சமையல்காரரை சந்தித்தேன் ரசம் செய்வதை ஒரு ரசமான அனுபவமாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
மணமான பெண் புகுந்த வீட்டுக்கு வந்த பின் மணமகனின் தாயார் அதாவது மாமியார் மருமகளுக்கு என் பிள்ளை சாப்பிடும் உப்பு அளவு இது தான் என சொல்லி சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
அந்த சமையல் சரியாக ஒரு பெண் செய்துவிட்டால் அந்த வீட்டில் வேறு ஒரு குழப்பத்திற்கும் வழி இருக்காது.
இது நான் சொன்ன கருத்தை அல்ல கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து.
மேலும் ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் ஒன்று இருக்கிறது.
எதுவானாலும் ஹோட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன் ஒரு விருந்தினர் வந்தாலும் அவருக்கும் கடையில் வாங்கி உணவு பரிமாறுவேன் என்று சொன்னால் அந்த உறவு நிலைக்காது .
அதற்காக எங்கும் எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அவ்வளவு தூரம் வீட்டில் சமையல் செய்து அன்போடு பரிமாறி மகிழ்வோம் ஆனால் அந்த உறவுக்கு எல்லையே இல்லை.
No comments:
Post a Comment