என் பள்ளி நாட்களில் ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டு வந்தவுடன் ஏதாவது ஒரு சிற்றுண்டியை என் மனம் தேடும் ஆனால் அது கிடைக்காது .
ஒரு வடையும் ஒரு காப்பி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றும் .
பக்கத்து வீட்டில் ஒரு மாமி வடை சுற்று விட்டுக் கொண்டிருப்பார்.
வடை மணம் அக்ரஹாரம் முழுவதும் ஒரு தூக்கு தூக்கும். அப்படி ஒரு சுவையை அந்த வடைக்கு. பாட்டிக்கு யாருமில்லை காலை மாலை ஏதாவது ஒரு சிற்றுண்டி செய்து அதை விற்று தன் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருந்தார்.
பாட்டி வீட்டில்ஒரு சிறிய ஜன்னல் ஓரம் இடைவெளிவிட்டு ஜன்னல் அருகே உட்கார்ந்து வடை சுட்டு விற்று கொண்டிருப்பார் அதிகபட்சம் 30 வடை தான் இருக்கும்.
வடை நன்றாக பொன்னிறமாக மொறுமொறுவென்று இருக்கும் அதிகமாக எண்ணெய் குடித்து இருக்கும் அப்படியிருந்தும் அந்த வடையை சுவைக்க நாங்கள் தவறுவதில்லை அந்த எண்ணங்களை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை.
ஒரு நாள் அம்மாவிடம் பக்கத்து வீட்டு பாட்டி சுடுறமாதிரி வடை சுடுமா என்று கேட்டேன்.
அம்மா சொன்னார் பாட்டிக்கு காது மந்தம் ஒரு நாள் சாவகாசமா கேட்டு சொல்றேன் என்று கேட்டார் என்ன நச்சரிப்பு தாங்காமல் ஒருநாள் பாட்டியிடம் கேட்டுவிட்டார்.
ஒருநாள் இரவு எல்லாரும் கூடி பேசுகையில் என் மகன் உங்க வடைக்கு பெரிய ரசிகன்.
உங்க வடை பக்குவம் சொல்லுங்க மாமி என்று கேட்டார். பாட்டி. லண்டன் ஹார்டுவேர் யுனிவர்சிட்டி கெமிக்கல் ஃபார்முலா மாதிரி, எடி சரஸ்வதி அது ரொம்ப கஷ்டமாக்கும் ....தண்ல நல்லா பருப்பை ஊறவைத்து என ஆரம்பித்தார்.
நான் கேட்ட முதல் சமையல் ரெசிபி அதான்.
அதன்பின் திருநெல்வேலி மதுரை என பல்வேறு சுவையான உணட அறிந்தபின் ஆனந்தவிகடனில் சுல்தான் மொய்தீன் அவர்களின் சுவை பயணம் தொடராக வெளிவந்தது .
ஒரு உணவை இப்படி எல்லாம் தயாரிக்க முடியுமா என்று அந்த தொடரை படித்து அறிந்து கொண்டேன் .
மனிதன் சாதாரண உணவிலிருந்து உலக உணவு வரை அழகாக செய்தஞஅசத்தியிருப்பார் பல்வேறு உலக விஐபிகளுக்கு அவர் உணவு சமைத்த விதத்தை எழுதி இருந்தார்.
அதில் பில்கிளிண்டன் முதல் நமது ஊர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் அடக்கம்.
அடுத்ததாக அறுசுவை அரசு நடராஜன் அவர்கள் தனது சுவை பயணத்தை எழுதி இருந்தார்.
அவரை பார்த்தால் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்க வேண்டும் என நான் நினைத்திருந்தேன் வாழ்நாளில் அப்படி ஒரு கொடுப்பினை எனக்கு கிடைக்கவில்லை.
சமையல் என்பது ஒரு பொருளை உண்பதற்கு விதமாக சமைத்தல் அல்லது பக்குவப்படுத்தி பரிமாறுதல் என ஆரம்பித்து அவ்வளவு அழகாக அந்த தொடரை எழுதி இருந்தார் ஆனந்த விகடனும் அதை புத்தகமாக வெளியிட்டது ஆனால் இப்போது அது கிடைக்கவில்லை.
பல்வேறு ஆளுமைகள் வீட்டில் ஒரு அரசு வை அரசு நடராஜன் அவர்கள் உணவு சமைத்து இருக்கிறார்கள் முந்தைய நாள் உணவில் இருந்து மறுநாள் பயண சாப்பாடு கட்டித் தருவது வரை அந்த உணவு தயாரிக்கும் முறையையும் அழகாக எழுதி இருந்தார் .
என் வருங்கால மனைவிக்கு இந்த தொடரை வெட்டி அதனை பரிசு அளிக்க வேண்டும் என்று தனியாக பாதுகாத்து வைத்திருந்தேன் அதை என் மனைவிக்கு பரிசாகவும் கொடுத்தேன்.
அதைப் படித்த என் மனைவியும் இதென்ன பிரமாதம் என தன்னுடைய பிரத்தியேக சமையல் மூலம் என்னை அசத்திவிட்டார்.
No comments:
Post a Comment