Wednesday, 11 December 2019

பாரதியார்

சுப்ரமணியபாரதி...

பாரதியை அவரது கவிதையை வாசிக்க எனது அத்தையே எனக்கு கற்றக் கொடுத்தார்.

பாரதியை படி. அதே உனக்கு ஒரு பெரிய உற்சாகத்தையும் தெம்பையும் ஒரு ஆன்ம விசாரணையும் தரும் என்றார்.

முதலில் படிக்க சொன்னது பாரதி பகவத்கீதைக்கு எழுதிய ஒரு நாற்பது பக்க முன்னுரையை.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார் பாரதி. பாரதிக்கு சமஸ்கிருதம் ஆங்கிலம் ஹிந்தி மராத்தி தமிழ் என பல மொழிகள் தெரியும் ஒன்று ஒன்றையும் ஆழமாக அவர் அறிந்திருந்தார்.

பகவத்கீதை முன்னுரையில் சாதாரணமாக தோன்றும் மட கேள்விகளுக்கும் சவுக்கை கொண்டு விளாசி இருப்பார் பாரதி.

யாரேனும் ஒரு கவிதை சொல்லி விட்டால் அதற்கு என்ன நானும் கவிதை எழுதுகிறேன் என முயன்று விடுவார்.

அப்படித்தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி ஒரு சமயம் பேச்சு  எழுதும்போது பாரதியார் ஆயிரம் எழுதுவோமே என்று முயன்றிருக்கிறார் அது 66 ஆக முற்றுப்பெற்று விட்டது.

குவளை கண்ணுக்கும் பாரதிக்கும் இடையே ஒரு சம்பாஷணையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் வர, ஆழ்வார்கள் எத்தனை பேர் என்றார்.

12பேர்

அவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை

நாலாயிரத்திற்கு சற்று குறைவு.

இவ்வளவு தானா...

நான் பாரதி ஆறாயிரம் பாடுகிறேன் என்று சொல்லி நாற்பது நாட்கள் மௌனமாக இருந்து பல பாடல்கள் பாடியுள்ளார்.

"அது எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா

மரணத்தை வெல்லும் வழி

சின்னத்தின் கேடு

இப்படியாக பாரதி ஆறாயிரம் பாரதி 66ஆக முடிவுற்றது.

நீங்களும் ஒரு முறை வாசித்து அனுபவியுங்கள்...

No comments:

Post a Comment