1. அக்ரிமோனி- Agrimony
"கவலை, வேதனை, அதி தீவிர கவலை
வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஆழ்ந்த கவலை மற்றும் மன வேதனையை போக்கி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிது. மது மற்றும் புகைப் பிடிக்கும் எண்ணம் தோன்றாமல் செய்கிறது.
1. பிறர் பார்வையில் மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக் கொள்வார்கள் ஆனால் மனதிற்குள் வேதனை படுவார்கள்.
2. தனக்கு உள்ள நோய் மன வேதனையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடந்து கொள்வார்கள்.
3. மற்றவர்களிடம் சகஜமாக இருப்பார்கள். எப்போதும் அமைதியாக இருப்பார்கள்.
4. தனிமையை வெறுப்பார்கள்
6. வேடிக்கையாகவும் நகைச்சுவையாக பேசும் தன்மை படைத்தவர்கள்.
7.சண்டை சச்சரவுகளை வெறுப்பார்கள்
8. கவலைகளை போக்க தீய பழக்கத்திற்கு அடிமையாவார்கள்.
9. துன்பத்தை மறக்க வெகுளித் தனமாக நடந்துகொள்ளுதல்.
10.தனிமையில் இருக்க பயந்து துணையுடன் இருக்க விரும்புதல்.
11.இளமையை விரும்புதல், வரும்காலத்தை எண்ணி வருந்துதல்.
No comments:
Post a Comment