Wednesday, 8 January 2020

மலர் மருந்துகள்

ஆஸ்பென் - Aspen

"காரணம் இல்லாமல் ஏற்படும் பயம்"

காரணமே தெரியாமல் மனதில் ஏதோ ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். அத்தகைய பயத்தைப் நீக்கி மனதிற்குள் தைரியத்தை கொடுக்கும். கனவினால் ஏற்படும் தொல்லை, தூக்கமின்மையை சரிசெய்யும்

1. காரணமே இல்லாமல் எப்போதும் ஒருவித பயத்துடனே இருப்பார்கள்.
2. இருட்டைக் கண்டு பயப்படுதல்.
3. இயற்கை மாற்றங்களை கண்டு பயப்படுதல்.
4. நடக்கக்கூடாதது ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுதல்.
5. கெட்ட கனவைக் கண்டு பயப்படுதல்.
6. மரண பயம்
மருத்துவரை காண பயம்
7. இடி, மின்னலுக்கு பயப்படுதல்.
8. ஊசி போட்டுக்கொள்ள பயப்படுதல்.
9. விபத்து நடந்து விடுமோ என்ற அச்சம்
10. இவர்கள் தாம் பயப்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்.

11.பயத்தால் அமைதியின்றி இருத்தல், செயல்களில் பின்வாங்குதல், நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு தயங்குதல்.
 

No comments:

Post a Comment