டாக்டர் எட்வர்ட் பாட்ச் என்பவர் இலண்டனில் பிறந்து M.B.B.S.; L.R.C.P., M.R.C.S. போன்ற பட்டங்களைப் பெற்று அலோபதி மருத்துவராகப் பேரும் புகழும் பெற்றார்.
ஆனால் அவருக்கு அலோபதி மருத்துவத்தில் மனநிறைவு கிட்டவில்லை. அலோபதி மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளும், நோய் முழுமையாகக் குணமாகாமல் திரும்பத் திரும்ப வருவதும் அவரைக் கவலைக்கு உள்ளாக்கியது. எனவே, ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்து முறையாக பயின்று ஹோமியோபதி மருத்துவ பணியில் ஈடுபட்டார். இதிலுள்ள ஏராளமான மருந்துகளும் அவற்றின் வீரியங்களும் சிகிச்சை அளிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியது. அதனால் வேறு எளிமையான மருத்துவ முறையைக் கண்டறிவதில் ஈடுபட்டார்.
எந்த நோய்க்கும் மனித மனமே மூலகாரணம் என்றும் மனம் சீர்பட்டால் உடல் சீரடையும் எனக் கருதினார்.
காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்து அங்குள்ள மலர்களையும் தலைகளையும் ஆராய்ந்து 37 மலர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை உட்கொண்டு அவற்றின் சாரங்கள் அற்புதமாகச் செயலாற்றுவதைக் கண்டார்.
இத்துடன் ராக்வாட்டர் என்னும் பாறை கசிவு நீரையும் மருந்தாக்கி 38 மருந்துகளைப் பயன்படுத்தினார். மேலும் 5 மருந்துகளை 1 கூட்டு மருந்தாக ஆக்கி ரெஸ்க்யூ ரெமெடி எனப் பெயர் சூட்டி மொத்தம் 39 மருந்துகளை உலக நலனுக்காக வழங்கினார்.
இவர் மனித மன உணர்வுகளை ஏழு பிரிவாக பிரித்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப இம்மருந்துகளை இந்த ஏழு பிரிவுக்குள் அடக்கினார்
No comments:
Post a Comment