Saturday, 19 October 2019

என் சமையல் அனுபவங்கள்-3

ஆனந்த விகடன் இதழில் அறுசுவை அரசு நடராஜன் அவர்கள் கல்யாண சமையல் சாதம் என்ற தலைப்பில் தனது சமையல் அனுபவத்தை ஒரு தொடராக எழுதிவந்தார். (இந்தத் தொடரைப் படித்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது தகவல்கள் கொஞ்சம் முன் பின் இருக்கலாம் நண்பர்கள் பொருத்தருள்க.)

அதில் அவர் அவியல் எப்படி செய்வது என்பது பற்றி ஏற்கனவே அறிந்திருந்தார். அந்த அவியலை மற்றொரு சமையல் கலைஞரிடம் கற்க செல்கிறார் .

காய்கறிகளை வேக வைத்து அவியல் செய்வர் இது பொதுவான முறை.

ஆனால் அவருஞ கற்றுக் கொடுத்த நபரோ காய்கறிகளில் சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் காய்கறியில் உள்ள நீர்ச்சத்து மூலமாகவே காய்கறிகளை வேக வைத்து அவியல் சமைத்தால்.

இந்த முறை கண்ட அறுசுவை அரசு நடராஜன் அவர்கள் சமையல் கலைஞரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க ஆசீர்வாதம் வாங்கினார் .

சமையல் கலையை எவ்வளவு தூரம் ஆழமாக நேசித்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

திரு நடராஜன் அவர்களின் சிறு வாழ்க்கை குறிப்பு.

1923-ல் கும்பகோணம் அடுத்துள்ள நன்னிலத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் நடராஜன். தலைமுறை தலைமுறையாய் கும்பாபிஷேகம், குருபூஜை போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்கு சமைத்துத்தரும் குடும்பத்திலிருந்து வந்த இவர், 16-வது தலைமுறையாக சமையல் கலையை நிலைப்படுத்தியவர்.

இவருடைய வாரிசுகளுக்கும் இவரின் சமையல் கலையை சொல்லிக்கொடுக்கத் தவறவில்லை.

தனக்குத் தெரிந்த சமையல் கலையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். அதுதான், 'கல்யாண சமையல் சாதம்'. இலையை எந்தப் பக்கம் போட வேண்டும், வலது முதல் இடது பக்கம் வரை என்னென்ன உணவு வகைகளை வைக்க வேண்டும், எதன்பின் எந்த உணவு வைக்க வேண்டும், பச்சடி, பாயசம் போன்றவற்றை எப்படி சாப்பிடவேண்டும்.. இப்படி பரிமாறுவதில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் கட்சிதமாக கடைபிடித்து சமையல் செய்வார்.

பல்வேறு ஆளுமைகள் வீட்டில் கல்யாணம் முதல் சபாக்கள் கச்சேரி வரை அனைத்திலும் அருசுவை அரசு நடராஜன் சமையல் இருக்கும்.

காஞ்சிபுரம் மஹா பெரியவர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் பல நேரங்களில் திரு நடராஜன் அவர்கள் காஞ்சி மகா பெரியவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று இருக்கிறார்


அறுசுவை அரசு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் (17.9.18) அன்று காலமானார்.

No comments:

Post a Comment