அன்பு மாணவ செல்வங்களே ஆறாம் வகுப்பில் நீங்கள் படித்த கடலும் கிழவனும் என்ற ஒரு படக் கதையை படித்து இருப்பீர்கள் அதை எழுதிய ஆசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற அமெரிக்கர் ஆவார் அவரை பற்றிய ஒரு சிறு தொகுப்பு இது...
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் நகரில் எர்னஸ்ட் ஹம்மிங்வே(1899) பிறந்தார்.
தந்தை மருத்துவர். தாய் இசைக் கலைஞர்.
பள்ளி பருவத்தில், பள்ளி இதழில் விளையாட்டுச் செய்திகளை எழுதிவந்தார்.
பட்டப் படிப்பு முடித்ததும், ‘கான்சாஸ் சிட்டி ஸ்டார்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்தார்.
முதல் உலகப்போரின்போது இத்தாலி ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்தார்.
இவரது சேவைக்காக இத்தாலியன் வீர சாகச பதக்கம் வழங்கப்பட்டது.
போரில் காயமடைந்த எர்னஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட அனுபவம், பின்னாளில் ‘எ வெரி ஷார்ட் ஸ்டோரி’ என்ற நூலுக்கு அடிப்படையாக அமைந்தது.
பின்னர் ‘டொரன்டோ ஸ்டார்’ என்ற அமெரிக்க பத்திரிகையில் பணிபுரிந்தார்.
பின் பாரீஸ் சென்று, ‘ஸ்டார்’ பத்திரிகையின் வெளிநாட்டு செய்தியாளராகப் பணியாற்றினார்.
1929-ல் மீண்டும் அமெரிக்கா திரும்பியவர், புளோரிடாவில் குடியேறினார். இங்குதான் மிகவும் புகழ் பெற்ற‘எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ நூலை எழுதினார்.
எழுதுவதுபோலவே, சாகசச் செயல்களிலும் அதிக நாட்டம் கொண்டவர் எர்னஸ்ட்.
எழுதாத நேரங்களில் ஸ்பெயின் நாட்டின் காளைச் சண்டை, புளோரிடாவில் ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற பல சாகச செயல்களில் ஈடுபட்டார்.
1940-ல். ‘ஃபார் ஹும் தி பெல் டோல்ஸ்’ என்ற நாவலை எழுதினார். இது புலிட்சர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
2-ம் உலகப்போரின்போது, போர்முனை செய்தியாளராகப் பணிபுரிந்தார். ‘தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ’ நாவலை 1951-ல் எழுதி உலகப் புகழ் பெற்றார். இதற்கு புலிட்சர் விருது கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1954-ல் பெற்றார்.
பாரீசில் தனது அனுபவங்களை ‘எ மூவபிள் ஃபீஸ்ட்’ என்ற நினைவுக் குறிப்பை எழுதினார்.
வித்தியாசமாக எழுதும் பாணி, குறைந்த சொற்களை உபயோகம் ஆகியவற்றால் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இவரது கதை பாத்திரங்கள் விசேஷமானது. இவரது பல பிரபலமான நூல்கள் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
. 7 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், 2 அபுனைவு (non-fiction) நூல்கள் வெளிவந்துள்ளன.
மறைவுக்குப் பிறகு 3 புதினங்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
சாகசப் பயணங்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பு காளைச்சண்டை என பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றிருந்த எர்னஸ்ட் ஹெமிங்வே காலத்தால் அழியாத பல படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் நீங்களும் அவர் போலவே பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
20-ம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே 62 வயதில் (1961) காலமானார்.
No comments:
Post a Comment