இஜாவ் இனக்குழுவின் ஒரு உன்னத குடும்பத்தின் வழித்தோன்றலும், ஒரு தொழிலதிபரின் மகனுமான கேப்ரியல் இமோமோடிமி கெய்பைன் ஒகாரா ஏப்ரல் 24 1921 அன்று பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு நைஜீரியாவின் புமவுண்டியில் பிறந்தார்.
பள்ளிப்படிப்பு முடித்தபின் புத்தகங்களைத் தைக்கும் பணியில் இருந்தவர், விரைவில் நாடகங்களையும் வானொலிக்காக நிகழ்ச்சிகளையும் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.
1953_ல் இவர் எழுதிய “The Call of the River Nun” எனும் கவிதை நைஜீரியக் கலை விழாவில் விருது பெற்றிருக்கிறது.
1960-களில் இவர் பொதுத்துறையில் பணியாற்றினார்.
1970-களில் State Publishing House (in Port Harcourt) பதிப்பகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தார்.
1960-ஆம் ஆண்டுக்குப் பிறகே இவர் பரவலாக அறியப்பட்டிருக்கிறார். அத்துடன் பல்வேறு மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்ப்பாகி வெளிவரவும் செய்துள்ளன.
இவரது கவிதைகளிலும் நாவல்களிலும் ஆப்பிரிக்கர்களின் சிந்தனை, மதம், கற்பனை, நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியன ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். மேற்கத்திய கலாச்சாரத்தால் ஆப்பிரிக்காவின் தொன்மையான கலாச்சாரம் பாதிப்புக்குள்ளாகிறதே என்கிற ஒகாராவின் கவலையையும் அக்கறையையுமே ‘Once Upon a Time - முன்னொரு காலத்தில்’ கவிதை பிரதிபலிக்கிறது.
இவரது கவிதைகள் மனித இனத்தின் போலியான தன்மையை தோலுரித்து காட்டுகிறது. அவரின் கவிதை வரிகள் சில..
மகனே, நிறைய கற்றுக் கொண்டேன்.
முக்கியமாக ஆடைகளைப் போல
நிறைய முகங்களை அணியக் கற்றுக் கொண்டேன்:
வீட்டுக்கு ஒருமுகம், அலுவலகத்துக்கு ஒரு முகம்,
தெருவில் ஒரு முகம்,
விருந்தோம்ப ஒரு முகம், விருந்தாளியாக ஒரு முகம்
அத்தனைக்கும் ஒத்துப்போக
நிரந்தமாக ஒரு நிழற்படப் புன்னகை.
மேலும் கற்றுக் கொண்டேன்
சிரிப்பதாகப் பற்களைக் காட்டவும்
இதயத்தைத் தொலைத்து கைகளைக் குலுக்கவும்;
’விடுதலை பெறுகிறேன்’ என நினைத்தபடி
‘விடை பெறுகிறேன்’ என சொல்லவும்;
மகிழ்ச்சி கிஞ்சித்தும் இல்லாமல்
‘சந்தித்ததில் மகிழ்ச்சி’ என சொல்லவும்;
அலுப்படைந்த பின்னர்
‘அளவளாவியதில் ஆனந்தம்’ என சொல்லவும்.
ஆனால் நம்பு, மகனே.
ஒரு காலத்தில் உன்னைப் போல் இருக்கையில்
எப்படி இருந்தேனோ
அப்படி இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.
முடக்கிப்போடும் இக்குணங்களைக்
களையவே விரும்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எப்படிச் சிரிப்பது என
நான் மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
ஏனெனில், இப்பொழுது
சிரிப்பென்ற பெயரில் நான் பற்களைக் காட்டுவது
பாம்பின் நச்சுப் பற்களாகவே கண்ணாடியில் தெரிகின்றது!
ஆகவே கற்பிப்பாய், மகனே
எப்படிச் சிரிப்பதென, காண்பிப்பாய் எப்படியென
ஒரு காலத்தில் உன்னைப் போல் இருக்கையில்
எப்படிச் சிரித்தேன், எப்படிப் புன்னகைத்தேன் "
சிறந்த ஆல்ரவுண்ட் " விருது, நைஜீரிய கலை விழா, 1953, "கால் ஆஃப் தி ரிவர் கன்னியாஸ்திரிக்கு "காமன்வெல்த் கூட்டு கவிதை விருது, 1979, தி ஃபிஷர்மனின் அழைப்பிற்காக ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்
1975 இல் நைஜீரியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆணையராக பணியாற்றினார்.
பின்னர் பொது சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். 1978 ஆம் ஆண்டில் அவர் சேகரித்த கவிதை தி ஃபிஷர்மேன் இன்வோகேஷன் என்ற தொகுதியில் வெளியிடப்பட்டது.
புத்தகத்தின் தலைப்பு கவிதை காமன்வெல்த் கவிதை பரிசை வென்றது, இது முழு பிரிட்டிஷ் காமன்வெல்த் சங்கங்களின் நாடுகளில் தோன்றிய ஆண்டின் சிறந்த கவிதையை கௌரவித்தது.
ஒகாரா தனது வயதான காலத்தில் தொடர்ந்து எழுதினார். அவர் 1980 களில் கவிதை மற்றும் இலக்கியம் குறித்து பரவலாக விரிவுரை செய்தார்.
1990 களில் பாரம்பரிய ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் குழந்தைகளுக்காக தொடர்ச்சியான படைப்புகளை எழுதினார்.
ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு இன குழுவுக்கும் ஒரு தனித்தன்மை பாரம்பரியம் உண்டு தனது கவிதைகளில் இந்த பாரம்பரியத்தை வலியுறுத்தினார் இனத்தவர்களின் ஆக்கிரமிப்பால் தனது நாட்டின் கலை பாரம்பரியம் இதை ஒருவராக அவர் வருந்தினார் ஒரு உன்னத கவிஞர் கேப்ரியல் காரர்கள் அவரின் மொழிபெயர்ப்புகள் தமிழில் இருப்பதாக நான் அறியவில்லை அவரின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தால் அது மிகப்பெரிய இலக்கிய பொக்கிஷமாக இருக்கும்.
25 மார்ச் மாதம் 2019( 97வது வயதில்)
நைஜீரியாவில் யெனகோவா என்ற இடத்தில் மறைந்தார்.
No comments:
Post a Comment