1925ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சத்திய சோதனை என்ற சுயசரிதை நூலை எழுதத் தொடங்கினார்.
உலகப் புகழ் பெற்ற தண்டி யாத்திரையை மார்ச் 12 ஆயிரத்து 130 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதியாக பங்கேற்க 1931ம் ஆண்டு ஆகஸ்டு 29 இல் இங்கிலாந்து சென்றார்
புகழ் பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாய் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் காந்தி டால்ஸ்டாயின் மறைவுக்குப் பிறகு 1910இல் தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை என்ற ஒன்றை உருவாக்கினார்.
காந்தியைப் பொறுத்தவரை சத்தியம் அகிம்சை இரண்டும் பிரிக்க முடியாததாக இருந்தது. அகிம்சையை தன் உயிருக்கும் மேலாக கருதினார் காந்தி.
அகிம்சையால் எதிரியின் தவறை அவர்களுக்கு உணர்த்த முடியும் என்றார் காந்தி.
தன்னை மகாத்மா என்று அழைப்பதை காந்தி ஒருபோதும் விரும்பியதில்லை.
காந்தியை சந்திப்பது என்பது நம் அருகில் உள்ள நண்பரை சந்திப்பது போல் அவ்வளவு எளிதானது நேரத்தை பின்பற்றுவதில் மிகவும் கண்டிப்பானவராக காந்தி இருந்தார்.
எவ்வளவு எளிமையாக இருக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக வாழ்க்கையை காந்தி வாழ்ந்தார்.
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் காந்தியிடம் கேட்ட கேள்வி இது நீங்கள் மக்களுக்கு சொல்வது என்ன? எனது வாழ்க்கையே மக்களுக்கு உண்டான செய்தியாகும் என்றார்.
ஆடம்பரப் பொருட்கள் எதையும் காந்தி தன்னுடன் வைத்துக்கொண்டது இல்லை. அது மற்றவர்களின் பேராசைக்கு வழிவகுக்கும் என்றார்.
தான் நடத்தி வந்த காங்கிரஸ் இயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஆரம்ப நாள் முதல் மிக சரியாக வைத்து இருந்தார்.
ஆங்கில அரசுக்கு எதிராக காந்தி ஏந்திய ஆயுதம் அகிம்சை மற்றும் உண்ணாவிரதம்.
கல்வியில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதை விட, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment